மது அருந்துவதற்காக முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் வயது (73) இவர் நேற்று அம்மா குளம் பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்ப நகர் அண்ணா தெருவை சேர்ந்த தங்கமணியின் மகன் மதன் (எ) மதன்குமார் (39) மற்றும் வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் பிரவீன் குமார் (23) ஆகிய இருவரும் சேர்ந்து மது அருந்துவதற்காக முதியவர் தங்கவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து முதியவர் தங்கவேல் அரியமங்கலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுசிலாவிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மதன் என்கிற மதன்குமார், பிரவீன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
CATEGORIES திருச்சி
