மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல் வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்தார்:-
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 20 ஆம் தேதி துவங்கிய நிலையில் நேற்றுவரை ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று கும்பகோணத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக தன் முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பாபு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள கள்ளவிநாயகர் ஆலயத்தில் வழிபட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். சிரித்த முகத்துடன் தொண்டர்கள் ஆரவாரத்தின் இடையே இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கம்மா என்று வாக்கு சேகரித்தபடி அதிமுக வேட்பாளர் பாபு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100 மீட்டர் தொலைவில் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது தொடர்ந்து ஐந்து நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ பி மகாபாரதியிடம் அதிமுக வேட்பாளர் பாபு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல்
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் இளஞ்செழியன் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.