மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவம் வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் கட்சியின் ஒன்றிய,நகர, பேரூராட்சி செயலாளர்களுக்கு வழங்கி புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கழக அவை தலைவரும் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி மயிலாடுதுறை மாவட்ட கழக மகளிர் அணி செயலாளரும் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ், மகேந்திரன் மற்றும் ஒன்றிய கழக நகர கழக பேரூர் கழக பிற அணி செயலாளர்கள் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
