மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே அனந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமையான இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது அங்காளம்மன், மகாகணபதி வலம்புரி கணபதி, மகாகாளியம்மன் ஸ்ரீ வீரன் ஸ்ரீ பிடாரியம்மன் மற்றும் சப்த கன்னியர் ஆகிய பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு 21 தேதி முதல் யாக கால பூஜைகள் துவங்கியது தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்கள் மற்றும் அங்காளம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.