மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் , தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்றும் , அவுட்சோசிங் முறையை கைவிட வேண்டும் எனவும் ,
பல மாதங்களாக வழங்கப்படாத அகவிலை படியை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்றது. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை கழுத்தில் அணிந்தபடி அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.