BREAKING NEWS

மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

 

 

காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றவிழாவில் அங்கன்வாடி புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

 

  தமிழகம் முழுவதும் காய்ச்சல் அதிகளவு பரவி சுகாதாரத்துறை அமைச்சர்கள் பேசி வருகிறார்கள் அவர்கள் என்ன வழிமுறை சொல்கிறார்களோ அதை பின்பற்றி தான் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது.

 

எங்கெல்லாம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும் பயப்படத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்கள். எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை இனி அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

 

காலை உணவு திட்டம் 1545 பள்ளிகளில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இது அடுத்த கட்டத்திற்கு விரிவு படுத்துவது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

 

 

இல்லம் தேடி கல்வியை கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டி இருக்கிறது. இது ஒரு முன்னோடி திட்டமாக உள்ளது உலக அளவில் கற்றல் திறன் 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ள நிலையில் அதனை நாம் 65 சதவீதம் குறைத்துள்ளோம்.

 

இந்த இடைவெளியை நாம் எப்படி குறைப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்விதான் கற்றலுக்கு அடிப்படை என்பதால் அதில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறோம்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )