மருத்துவம், கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18, லட்சம் மோசடி: காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் எஸ். பி., யிடம் புகார்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருவர் புகாரளித்தனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் ஏ. எஸ். ராஜாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் புகார் மனு அளித்தனர்.
அதில் வேலூர் அடுத்த பென்னாத்தூர் அல்லி வரத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகள் கிராம நிர்வாக அலுவர் பணிக்காக தேர்வு எழுதி இருந்தார்.
ஆகையால் எனக்கு் தெரிந்த அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி என்னிடம் பணம் ரூ.10 லட்சம் வாங்கினார்.

நானும் அதை நம்பி பணம் கொடுத்தேன். இந்த நாள் வரை எந்த வேலையும் வாங்கித் தரவில்லை, என் பணத்தையும் திருப்பி தரவில்லை. நான் பலமுறை அவர் வீட்டுக்கு போய் கேட்டேன் அதற்கும் சரியான பதில் கூறவில்லை.
என்னை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கே.எஸ். புரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது உறவினர் மகனுக்கு மருத்துவ துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி காட்பாடியைச் சேர்ந்த ஏ. எஸ் .ராஜா ரூ.8 லட்சம் என்னிடம் பணம் வாங்கினார். ஆனால் இந்த நாள் வரை அரசு வேலையும் வாங்கித் தரவில்லை. பணமும் திருப்பி தரவில்லை.
நான் உன் மீது போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று கூறிய பிறகு ஐந்து லட்சத்திற்கான இரண்டு காசோலைகளை மட்டுமே கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது.
எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர கோரி வேண்டுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மனவேதனையோடு இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று முன் தினம் (புதன்கிழமை) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவாக எழுதி எங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு இருவரும் தனித்தனியாக மனு அளித்தார்கள்.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விசாரணை செய்து அதன் பிறகு உங்களை அழைக்கின்றேன் என்று அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக காட்பாடி தாலுக்கா, காமராஜர் முதலில் தெரு ,வீட்டு நம்பர் 27, என்ற முகவரியில் வசிக்கும் ஏ. எஸ் .ராஜா என்பவர் தற்போது ஆரணியில் அவருடைய சம்பந்தி வீட்டில் தலைமறைவாக இருக்கிறார் என்று மனுதாரர் கூறியுள்ளார்.
