BREAKING NEWS

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.

செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள்.

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் பெய்த மிதமான மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதீர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் நெற்கதிர்கள் முளைத்து அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரியிடம் முறையிட்டும் இன்று வரை தங்களது விளைநிலங்களை கள ஆய்வு மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டும் விவசாயிகள் 

 

தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் மழையால் சேதம் அடைந்த விளைநிலங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS