BREAKING NEWS

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது.

 

 

சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகள் கொண்டு நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

 

 

பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.

 

 

வாழைப்பழங்கள் மற்றும் பொங்கல் மாடுகளுக்கு வழங்கப்பட்டன. கொரோனா பாதிப்பால் ஒரு மாடு மட்டும் வைத்து நடத்தப்பட்ட மாட்டுப் பொங்கல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS