BREAKING NEWS

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

மாண்டஸ் புயல் எதிரொலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

 

இந்திய மண்டல வானிலை மைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி, கடலூர் மாவட்டத்தில் 09.12.2022 மற்றும் 10.12.2022 ஆகிய நாட்களில் பலத்த காற்று மற்றும் பரவலாக கனமழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புயல் கரையை கடக்கும் சமயங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களுடைய சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் எனவும், மேலும், பொதுமக்கள் கீழ்கண்ட பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் மாவட்ட நிருவாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

மெழுகுவத்தி மற்றும் தீப்பெட்டி அத்தியாவசியப் பொருட்கள் ( உணவு வகைகள், தண்ணீர், பிஸ்கெட், ரொட்டி போன்ற உலர்ந்த உணவு வகைகள்) எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மருந்து மற்றும் பால் பவுடர் மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள் சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருட்கள் மேலும், மழை மற்றும் புயல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04142 – 221383, 04142 – 233933, 04142 – 221113 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

 

கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த / பலவீனமான வீடுகள், நீர் சூழக்கூடிய மற்றும் நீர் உட்புகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகே மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

மேலும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )