BREAKING NEWS

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.

தஞ்சாவூர்,

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த சென்ற மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

 

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் மெட்ரிக்குலேசன் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து,..

 

தஞ்சை ரயில் நிலையம் முன்பு காந்திஜி சாலையில் மாதர் சங்கத்தினர் திடிர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )