BREAKING NEWS

மாத்தூரில் கூரை வீடு எரிந்து சேதம். எம்.எல்.ஏ நிவேத முருகன் நிவாரணம் வழங்கினார்.

மாத்தூரில் கூரை வீடு எரிந்து சேதம். எம்.எல்.ஏ நிவேத முருகன் நிவாரணம்  வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் ஊராட்சி அக்ரஹர தெருவை சேர்ந்த ஆண்டவர் கூறை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீடு திடீரென்று ஏற்பட்ட தீபத்தால் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்த நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் வழங்கினார். அ அதேபோல் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ரூ 5 ஆயிரம் மற்றும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

இதில், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பி.எம் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )