மானாமதுரை, மூங்கில்ஊரணியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் தாய் தமிழர் கட்சியின் பொதுசொயலளார் ச.அ.செல்வம் மற்றும் மூங்கில் ஊரணி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் வைத்து வழிபாடு செய்தும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.

தியாகி இமானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் விழா கொண்டாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பரமக்குடிக்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதேபோல் இன்று மானாமதுரை பகத்சிங் ஆட்டோ சங்கத்தின் சார்பாக தியாகி இம்மானுவேல் சேகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைபோல அருகில் உள்ள மூங்கில் ஊரணி கிராமத்தில் வெகு கொடியேற்றப்பட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டனர்.
