மானாமதுரை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பாக கலந்தாய்வு கூட்டம்…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருகின்ற 31.08.2022 அன்று நடைபெறயுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் செல்வது சம்பந்தமாக பொது மக்கள், கட்சி நிர்வாகிகள்,பிற அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து காவல்துறை சார்பில் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில்
அரசு விதிமுறைக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி நடத்தபடவேண்டும், மற்றும் சிலைகளை அரசு குறிப்பிட்டுள்ள அளவின்படி வைக்க வேண்டும்
எளிதில் கரையக்கூடிய விநாயகர்சிலைகள் இருக்க வேண்டும்,
கடந்த வருடங்களில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் மட்டும் ஊர்வலம் செல்ல வேண்டும், கடந்த கால வருடங்களில் வைக்கப்பட்டுள்ள இடத்தை தவிர மற்ற இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ அல்லது பிற அமைப்புகளை இழிவாக பேசக்கூடாது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மானாமதுரை காவல்துறை ஆய்வாளர் முத்துகணேஷ், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், சிப்காட் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக், மானாமதுரை டிராபிக் ஆய்வாளர் முருகன், திருப்புவனம் காவல் நிலைய பொறுப்பாளார் ஆதிலிங்க போஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்தது.
