மானாமதுரையில் ஓபிஎஸ், தரப்பு மகிழ்ச்சி,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி அதிமுகவில் இருந்து ஓ. பன்னிர்செல்வத்தை நிக்கியது செல்லாது ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்துதான் பொதுகுழுவை கூட்ட வேண்டும் தனித்தனியாக பொதுகுழுவை கூட்டக் கூடாது ஜீலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது ஜீன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால், இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி, ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி,இதை தொடர்ந்து மானாமதுரை ஓபிஎஸ், தரப்பினர் முன்னாள் மாவட்ட செயலாளர் நெட்டூர், ஜெயராமன் இலக்கிய அணி மாவட்ட துணைச் செயலாளர் கே. அர்ஜுனன் மற்றும் மானாமதுரை தொழிலதிபர் அதிமுக, அழகர் அவர்களும் உடன் இருந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் மானாமதுரை தேவர் சிலை அருகில் அதிமுக கொடிகளை ஏந்தியவாறு பட்டாசுகளை வெடித்தும் சாலையில் வரக்கூடிய அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் பஸ்சில் பயணிக்க கூடிய பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி எப்போதும் ஓபிஎஸ் வழியில் தான் இருப்போம் என்று கோஷமிட்டு அதிமுக கொடியினை அசைத்துக்கொண்டு ஆரவாரத்துடன் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர் ஓபிஎஸ் ஐயா எவ்வழியோ அவ்வழியே நாங்கள் செயல்படுவோம் என முழக்கமிட்டனர்.
