BREAKING NEWS

மானாமதுரையில் கோவில் சிலை, குதிரை சிலை வடிவமைப்பு பணி தீவிரம்.

மானாமதுரையில்  கோவில் சிலை, குதிரை சிலை வடிவமைப்பு பணி தீவிரம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புரவி எடுப்பு விழா விற்காக தயாராகும் சாமி சிலைகள் குதிரைகள் மண்பாண்டத் புகழ்பெற்று விளங்கும் ஊரான மானாமதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் சாமி சிலைகள் குதிரைகள் காளைமாடுகள் தயார் செய்யப்பட்டு மானாமதுரை வேளாளர் தெருவில் இருந்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

 

கிராமத்தில் நடைபெற இருக்கும் திருவிழாவிற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது சிற்பி ப.சீனிவாசன், பூசாரி கோபால், சிற்பி பழனிசாமி, பூசாரி, சந்திரன், சிற்பி ஆறுமுகம், சிற்பி கண்ணன், ஓவியர் பாலா இவர்கள் சிற்ப கலையில் வலிமை பெற்று வழங்கும் மானாமதுரையில் சுற்றுப்பகுதிகளில் நடக்கக்கூடிய அனைத்து ஊர்களிலும் இருக்கக்கூடிய புரவி எடுக்கும் திருவிழாவிற்கு 25 ஆண்டுகளாக சிலை செய்து வருகின்றனர்.

 

 

இவர்கள் அனைத்து வகையான கோவில் சிலைகளை வடிவத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மன் சிலை காளியாத்தாள் சிலை அய்யனார் குதிரை சிலை குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வடிவில் சிலை செய்து கொடுப்பதும் அந்தந்த கோவில் சிலைக்கு ஏத்த மாதிரி வண்ணங்களையும் தீட்டும் திறன் கொண்டு இருக்கும் ஓவிய கலைஞர்களும் உள்ளனர். அனைத்து விதமான கோவில் சிலைகளும் செய்து வருகிறார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )