BREAKING NEWS

மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!

மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில்  கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!

மாமன்னர் பூலித்தேவனின் 307 வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவலில் நடைபெறும் மாமன்னர் பூலித்தேவனின் 307 வது பிறந்தநாள் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கபட்டு, அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்த வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட முக்கிய நிர்வாகிகளை வரவேற்பது. மாமன்னர் பூலித்தேவனுக்கு சிறப்பான முறையில் மரியாதை செலுத்துவது என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சண்முகப்பிரியா,
மாவட்ட பொருளாளா் சண்முகையா மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச் செயலாளா் சிவஆனந்த் நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )