மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டத்தில் 27 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாகவும், ஆனால் தங்களது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் நான்கு மாத காலமாக 15 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக துறைரீதியாக மனு அளித்தும் இது நாள் வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும்,
நான்கு முறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை என கூறியும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை தவிர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கையை மனுவாக வழங்கினர்.
