மின் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசங்கம் திருப்பத்தூர் மின் பகிர்மான சார்பில் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பத்தூர் மின் பகிர்மான பள்ளிகொண்டா கோட்டம் வடகத்திப்பட்டி உபகோட்டம் அகரம் சேரி பிரிவு சார்பில்,
பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசங்கம் வடகத்திபட்டி உதவி செயற்பொறியாளர். சீனிவாசன். மாதனூர் இளநிலை பொறியாளர் லாவண்யா, அகரம் சேரி இளநிலை பொறியாளர். சந்திரசேகர் மற்றும் அனைத்து பணியாளர்கள் சேர்ந்து பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரச்சரங்கம் வழங்கப்பட்டது.
மேலும் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் அவர்கள் அருந்து கிடக்கும் கம்பியை தொடக்கூடாது. இப்படி எவரேனும் தொட்டு சிக்கிக் கொண்டிருந்தால் அவரை கைதொட்டு காப்பாற்ற முயற்சிக்காதீர் மரக்கட்டையை கொண்டு தள்ளி விடவும். டிவி ஆன்டனா. கேபிள் ஒயர். மற்றும் சீரியல் தவறுகளை அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள்..,
மழைக்காலங்களில் மின்மாற்றி மின் கம்பங்கள் அருகே செல்லாதீர்கள். இடி மின்னல் மற்றும் மழைக்காலங்களில் வீட்டில் உள்ள டிவி. கிரைண்டர். மிக்ஸி. பிரிட்ஜ். ஆகிய மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும் என்று மின் பாதுகாப்பு விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.