மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை காலாண்டு தணிக்கைக்காக, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்
பிரமுகர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியர் ஆர்.ஜெய்குமார், ஆற்காடு வட்டாட்சியர் வசந்தி, ஆற்காடு தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் (பொ) ராஜ்குமார் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசியல்ஆற்காடு நகராட்சிஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிராணிப்பேட்டை மாவட்டம்