மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

ஜே சி ஐ இந்தியா மண்டலம் 16 ன் கிளை இயக்கத் தலைவர்களுக்கான மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட கிளை இயக்க தலைவர்கள், மண்டல ஆட்சி மன்றக் குழு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
மண்டலத் தலைவர் ஜே சி அனிதா முரளி பயிற்சியை துவங்கி வைத்தார். மண்டல இயக்குனர் ஜேசி இளவரசன் இப்பயிற்சியை வழிநடத்தினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மண்டல இயக்குனர் ஜேசி ஏழுமலை மற்றும் ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் தலைவர் ஜேசி வெங்கடகிருஷ்ணன் செய்தனர். ஜேசி வீரமணி அவர்கள் பயிற்சியாளராக இருந்து மண்டல மாநாட்டிலும், தேசிய மாநாட்டிலும் கிளை இயக்கத் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றி விளக்கிக் கூறினார்.
ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத் தலைவர் ஜேசி வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார். மண்டல செயலாளர் ஜேசி சதீஷ் கண்ணன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
