முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார். முன்னதாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அந்த உரையில் திமுக அரசு ஏழைகளை வஞ்சிக்கும் அரசு.
இன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் ஸ்டாலின் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.
இவருடைய ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது
இன்று இந்த அரசாங்கத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. பல காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களை எப்படி இந்த அரசு பாதுகாக்கும் என்ன பேசினார்.
மேலும் இன்று 8வமது சிறுமி முதல் 80வயது பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கவேண்டும் . ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி உள்ளது.
மேலும் அதிமுகவின் 10ஆண்டுகால ஆட்சியில் 11அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று , இன்று வரை மருத்துவக்கல்லூரி கொண்டுவரவில்லை.
அதுமட்டுமின்றி பத்திரப்பதிவில்
10சதவிகிதம் கமிசன் கொடுத்தால்தான் வேலை நடக்கும்.,
டாஸ்மாக் கடைகளில் 10ரூபாய் அதிகம் கொடுத்தால் தான் சரக்கு கிடைக்கும். இது போன்ற பல அரசு துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே
வருகின்ற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக அரசு அமைந்தவுடன் திமுக டாஸ்மார்க் ஊழல் , மேயர்களின் ஊழல் போன்ற அனைத்து அரசு துறைகளிலும் ஊழல்கள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு ரவுடி கும்பல் ஒருவரை விரட்டிவிரட்டி அடிக்கிறது. அதை இரண்டு காவலர்கள் வேடிக்கை பார்த்துு கொண்டிருக்கின்றனர் இப்படிப்பட்ட நிலைமையில் மக்களை இவர்கள் எவ்வாறு பாதுகாப்பார்கள் என பேசினார்.
அதைவிட அவல நிலையாக பொதுமக்கள் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக்கொண்டு,பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் ஆற்றில் வீசப்படுகிறது.
அதுமட்டுமன்றி தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சி வந்தால் நீட்தேர்வு ரத்து என்று உறுதிமொழி கொடுத்ததை ஸ்டாலின் நிறைவேற்றினாரா?
ஒரு கோடி பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கினீர்களே அது என்னானது?
உதயநிதி ஸ்டாலின் கூறிய நீட் தேர்வு ரத்து பற்றிய ரகசியம் இன்னும் சொல்லவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ,அதிமுக ஆட்சியில் பழனி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது . ஆனால் திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பழனியில் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் , ரவி மனோகர், முருகானந்தம், ராஜா முகமது மற்றும் கட்சிி பொறுப்பாளர்கள் , கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.