மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் குத்தாலம் வணிகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள டிஇஎல்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சாமி செல்வம் தலைமை வகித்தார்.வர்த்தக சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் நவநீதன் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொருளாளர் துரை முன்னிலை வகித்தனர். முகாமை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.
இதில் செயலாளர் இராஜமாணிக்கம்.பொருளாளர் சிவகுமார். கௌரவ தலைவர் பாலச்சந்திரன்.துணை செயலாளர் வெங்கட்ராமன், துணைத் தலைவர் அருள் மற்றும் ஆண்கள் பெண்கள் என பெரும் திரளான பொதுமக்கள் பலர் வந்து தங்களது கண்ணை பரிசோதனை செய்து கொண்டு சென்றனர்.
கண் பார்வை குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அன்றைய தினமே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு லென்ஸ் அறுவை சிகிச்சை மருந்து உணவு தங்குமிடம் வசதி மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக செய்து பின்னர் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மூன்று நாட்கள் கழித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.