ராஜபாளையம் பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே சொத்து வரி உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஐ ராஜபாளையம் நகர செயலாளர் விஜயன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளக்க உரை முன்னாள் எம்எல்ஏ சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் முன்னாள் எம்பி சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம். சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி. கட்சி உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகமான சொத்து வரியை குறைக்க வேண்டும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும், முன்னதாக உயர்த்தி வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்,
சத்திரப்பட்டி சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பாதாள திட்ட விரைந்து முடிப்பதோடு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என் மன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.