BREAKING NEWS

ராஜாகோரி நந்தவனத்தில் வையம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று களை மேயர் சண்.ராமநாதன் நட்டார்.

ராஜாகோரி நந்தவனத்தில் வையம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று களை மேயர் சண்.ராமநாதன் நட்டார்.

தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் உள்ள ராஜாகோரி நந்தவனம் பகுதியில் வையம் அறக்கட்டளை சார்பில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இருந்த சுற்று சூழலுக்கு கெடு விளைவிக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை வேறுடன் அகற்றி அந்த இடங்களில் சுற்றுசூழலுக்கு பயன்தரக்கூடிய மரங்களான மகிழம், வாகை. இலுப்பை. அரசமரம், ஆலமரம், வாதாம். நீர் மருது,கருமருது. நாவல், கொய்யா, கொடுக்காப்புளி, கல்யாண முருங்கை, நெட்லிங், மகிழம்பூ, பாதாம் மரம், நாகவல்லி பூ மரம் ஆகிய பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பயனளிக்கும் விதமான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா
6வது வார்டு மாமன்ற உறுப்பினர். ஆக்னஸ் மேரி, உடலுழைப்பு முறைசார சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார். நல்லோர் வட்ட தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் கோ.சி.திருமேனி. வழக்கறிஞர் அருள் சர்மா, திலிப் குமார் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.
வையம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயச்சந்திரன் மற்றும் செய்தியாளர் லியோ யாக்கோப் ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்து இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )