ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!!
![ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!! ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!!](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-25-at-11.24.30-AM.jpeg)
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கம் அருகில் உள்ள இ பிளாக்கில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி, வங்கி கிளையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
மேலும் 108 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். தொடர்ந்து புதிய ஏ.டி.எம். மையம், முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இந்த புதிய வங்கியில் சேமிப்பு கணக்கு, கடன் உதவிகள், நகை கடன் உதவிகள் போன்ற அனைத்து விதமான சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி பொது மேலாளர் (சென்னை) ஜி.ராஜேஸ்வர ரெட்டி,
மண்டல துணை மேலாளர்கள் கேஸர்நாத், பிரசன்னகுமார், மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம், கிளை மேலாளர் கே.அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.