BREAKING NEWS

ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் திமிரி ஒன்றியத்தில் ஸ்டெம் வானவில் மன்றம் மில்லியன் அறிவியல் விழா கொண்டாட்டம் திமிரி வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது.

 

இதில், திமிரி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கான 30 நபர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வட்டார வளமையம் மேற்பார்வையாளர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் விஜயா, முன்னிலை வகித்தார்.

 

நடைபெற்ற இப்பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா கோபால், கலந்து கொண்டு ஒருநாள் பயிற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் கள அளவில் மே மாதத்தில் இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் அதிசயங்கள், கணித புதிர்கள், விளையாட்டுகள், மாணவர்கள் கற்பனை திறன்,

 

 

படைப்பாற்றல் திறனை வளர்த்தல், அன்றாட வாழ்வில் எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு சோதனை செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். இந்த பயிற்சியில் கருத்தாளராக ரோசி, தனலட்சுமி, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஹரிதாஸ் பயிற்சிகளை ஏற்பாடு செய்தார்.இதில் தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் செல்வன். நன்றி கூறினார்.

 

திமிரி வட்டார வள மைய அலுவலகத்தில் மேற்பார்வையாளர் குமரேசன், தலைமையில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சியை சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா கோபால், கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்.

CATEGORIES
TAGS