ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

தஞ்சை கீழவாசல்,
15-வது வார்டில் ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சை மாநகராட்சியில் C.F.C. திட்டம் (2021-2022) திட்டத்தின் படி இடைவெளி நிரப்பும் பொது சுகாதார வளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 17 கழிவறைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் முதல் கட்டமாக 12 சுகாதார வளாகங்கள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோடு அருகில் உள்ள (15- வது வார்டு) ரூ.4 லட்சம் மதிப்புள்ள இடைவெளி நிரப்பும் பொது சுகாதார வளாகக் கட்டிடம் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தன.
இதை யடுத்து இந்த புது சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்து நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக் என்கிற கார்த்திகேயன், கவுன்சிலர் மேத்தா, 15- வது வார்டு கவுன்சிலர் காந்திமதி நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் ஸ்டெல்லா நேசமணி மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.
அதேபோல் தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் இடைவெளி நிரப்பும் பொது சுகாதார வளாக கட்டிடத்தையும்,
ராவுத்தார் பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தையும் மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.