BREAKING NEWS

வங்கிக் கடனோ, சொத்து அடமானமோ, சாட்சிக் கையெழுத்து என எந்த நெருக்கடியும் இல்லாமல் கோடிக்கணக்கில் முதலீட்டை திரட்டி, தங்களது வாழ்க்கையை மேம்படுத்திட நடத்துவது தான் “மொய் விருந்து” தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டும் மொய்விருந்து பற்றிய செய்தி:

வங்கிக்  கடனோ,  சொத்து அடமானமோ, சாட்சிக் கையெழுத்து என எந்த நெருக்கடியும் இல்லாமல்  கோடிக்கணக்கில்  முதலீட்டை திரட்டி,  தங்களது வாழ்க்கையை மேம்படுத்திட  நடத்துவது தான் “மொய் விருந்து”   தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டும்  மொய்விருந்து பற்றிய செய்தி:

காதுகுத்து, கல்யாணம், புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று பரிசு பொருளாகவோ, மொய் பணமாகவோ மரியாதை செய்வது வழக்கமாக உள்ள நிலையில்

பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உறவு முறையினரை பத்திரிக்கை வைத்து அழைத்து பணம் வசூலிப்பதற்க்காகவே பொய் விருந்தை நடத்துகின்றனர்

ஆப்பையில் குழம்போடு கறியை அள்ளிப்போட்டு, கறிச்சோறு விருந்து வைக்கின்றனர் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, கை நிறைய மொய் பணத்தை செலுத்தும் மொய்விருந்து

ஆடிமாதம் துவங்கி ஆவணியில் உச்சம் பெருகிறது
நிகழ்ச்சியை தனியாகவோ, செலவுகளை குறைத்திட 10 பேர், 20 பேர் என ஒரே மண்டபத்தை பிடித்து மொய்விருந்தை நடத்துகின்றனர்

 

அண்டா, குண்டா, குவளை என வகைவகையான பாத்திரங்களை வைத்து அவரவருக்கான மொய் பணத்தை பெறுபவர்கள், நல்ல நோட்டா, கள்ள நோட்டா என கண்டறியும் இயந்திரங்களையும் காணமுடிகிறது

மொய் செலுத்துவது யார், செலுத்திய தொகை எவ்வளவு பெயர் ஊர் விபரம் உள்ளிட்டவற்றை பெரிய சைஸ் நோட்டுகளில் எழுதிவைத்து, நோட்டில் மொய் கணக்கை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்பவர்கள்

5 ஆண்டுகளில் மொய் செலுத்தியவர்கள் நடத்தும் விழாக்களுக்கு மறக்காமல் சென்று அவர்கள் செலுத்திய மொய்யை விட சற்று கூடுதலாக செய்முறையை செய்துவிடுவதால்

பணம் சுழற்சி முறையால் பலரிடமும் செல்வதால் ஏழையும், தென்னந்தோப்பு, கடை, வீடு என ஏதோ ஒரு சொத்தை வாங்கி அதன்மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதாக கூறுகின்றனர் பேராவூரணி மக்கள்

கோடிகணக்கில் கிடைக்கும் பணத்தை தங்களது வங்கிகளில் டெபாசிட் செய்திட வங்கி ஊழியர்கள் முகாமிட்டு பணத்தை பெற்றுக்செல்கின்றனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )