வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் செல்போன் திருட்டு செல்போன் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த மாலதி என்ற பெண் வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாலதி பணியில் இருந்த போது சுமார் 10 மணி அளவில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து மற்றும் தலை வலிப்பதாக கூறி சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அந்த நபரை பரிசோதித்த செவிலியர் மாலதி அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்
அதன் பின்னர் செவிலியர் மாலதி மேஜை மீது வைத்திருந்த தனது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற வந்த மர்ம நபர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சிகிச்சைக்காக வந்த 36 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மேஜை மீது வைத்திருந்த செவிலியரின் சுமார் 20,000 மதிப்புள்ள செல்போன் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து செவிலியர் மாலதி அளித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளே வந்து செல்போன் திருடி சென்ற சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.