வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.

புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கட்டிடம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர் மேலும் பள்ளி கட்டிடத்தில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் இந்த கல்வி ஆண்டிற்கான எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 71 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிலையில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியதும் தொடர்ந்து 3 முறை கூட்டுறவு சங்க தலைவரும் திமுக பிரமுகர் குமார் என்பவர் பணிகளை செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் இரவோடு இரவாக திமுகவை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பள்ளி கட்டிடம் கட்ட அளவீடு செய்து நடப்பட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்துள்ளனர். இதனை அறிந்த வருகை கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி பொறுப்பு டிஎஸ்பி நிலவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய போது,
அதிகாரிகளுக்கு கட்டளையிடும் வகையில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பேசியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டபடும். மீண்டும் குறுக்கீடு செய்து தடை செய்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா எச்சரிக்கை விடுத்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின்பும் அதே கட்சியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும்
சம்பவம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.