வாணியம்பாடி நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை கண்காணிக்கவும்,
இரவு நேரங்களில் நிகழும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் வாணியம்பாடி நகர பகுதியில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம், காதர் பேட்டை மற்றும் ஜனதாபுறம்,
செட்டியப்பணுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இரவு நேர குற்ற செயல்களை தடுக்க முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணிஇரவு ரோந்து பணிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடிவாணியம்பாடி நகரம்