வாணியம்பாடி புதிய ஆணையாளராக மாரிசெல்வி பொறுப்பு ஏற்பு.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்டான்லிபாபு விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் ஆகி சென்றுள்ளார்.
இதே போல் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையளராக இருந்த மாரிசெல்வி பணி மாறுதல் ஆகி வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மாரிச்செல்வியை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்