வாணியம்பாடியில் சாலை விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி ஆறு பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூட்டன் மேம்பாலம் அருகே விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி ஒருவர் படுகாயம் 6 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை.
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இருந்து ஆம்பூர் தனியார் ஷீ கம்பெனிக்கு தினமும் சென்று வருவது வழக்கம் ,..
இன்று காலை புத்துக்கோவில் பகுதியில் இருந்து ஆம்பூர் செல்லும் வழியில் வாணியம்பாடி நியுட்டன் மேம்பாலம் அருகே ஆட்டோ நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதா?
இல்லை பின் இருந்துவந்த வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடி ஆட்டோ விபத்து
