வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.எல். ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதில் நகர செயலாளர் சதாசிவம்,நகர துணை செயலாளர் கோவிந்தன்,
நகர நிர்வாகி சங்கர்,பேரூராட்சி செயலாளர் சரவணன், சிக்னாங்குப்பம் ஊராட்சி செயலாளர் சௌந்தர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிஎடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடி பேருந்து நிலையம்
