வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியராக கவிஞர் பிரேமலதா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செதுக்கல்கள் என்று ஒரு கவிதை நூல் சொந்தமாக எழுதியுள்ளார். அந்த நூலின் அறிமுக விழா கணவாய்புதூர் பகுதியில் இயங்கி வரும் இமயம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் சி.இளம்பரிதி அனைவரையும் வரவேற்றார்.
இதில் புத்தக அறக்கட்டளை தலைவர் ப.இளம்பரிதி அறிமுக உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் கவிமாமணி. பேராசிரியர் அப்துல்காதர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு இரா.வில்சன் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு கவிதை நூலை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசினார்கள்.
பின்னர் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கவிஞர் பிரேமலதா பெரியசாமி பேசிய போது அனைவரும் வீடுகளை கட்டும் போது சமையல் அறை,படுக்கை அறை என அறைகள் அமைக்கும்போது புத்தக அறையை சேர்த்து நிருவி அதில் புத்தகங்களை சேமித்து வைத்து வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை புகுதுங்கள் என்றும் நான் ஒரு பெண் அரசு பணியில் இருந்து நூலாசிரியர், கவிஞர் என்று பன்முக தன்மை பெற புத்தக வாசிப்பு பழக்கம் தான் காரணம் என்று கூறினார்.
இதில் வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலாளர் நா.பிரகாசம், நகர கூட்டுறவு சங்க தலைவர் வி.எஸ்.சாரதிகுமார், கல்லூரி செயலாளர் மு.கோபால், கல்லூரி தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.