BREAKING NEWS

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம்,

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் நடராஜன் இவரது தாத்தா பழனி பண்டாரம் என்பவருக்கு சொந்தமான நிலம் பழங்கரை பகுதியில் உள்ளது. 8.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் 80 கோடி ரூபாய் மதிப்புடையது.

 

 

பன்னி பண்டாரம் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காமல் காலமாகிவிட்ட சூழலில் எட்டு பேர் வாரிசுதாரர்களாக உள்ளனர் இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு வாரிசுதாரர்களில் ஐந்து பேர் இணைந்து முன்னாள் ஐஜி சிதம்பரசாமி மற்றும் சிலர் இணைந்து குறிப்பிட்ட நிலத்தை கிரையம் செய்துள்ளனர்.

 

2016 ஆம் ஆண்டு கிரையம் செய்யப்பட்டதன் தகவல் கிடைத்ததை அடுத்து வாரிசுதாரர்களான 3 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை மேறாகொள்ளப்படடு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து,

 

வாரிசுதாரர்கள் நடராஜன் உள்ளிட்டோர் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் மற்றும் பெயர் சேர்ப்பு பணிகளை வழக்கு நிலுவையில் உள்ள போது செய்யக்கூடாது என புகார் மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    அருண்குமார் நடராஜன் 3 years

    வழக்கு நிலுவையில் உள்ளது என மனு அல்லது வழக்கறிஞர் அறிவிப்பு வழங்கினாலும் பட்டா மாற்றி விடுவார்கள். மேல்முறையீடு செய்தால் வழக்கு முடிந்த பின் மேல் நடவடிக்கை எடுக்கும் என மேல்முறையீடு மனுவை கோட்டாட்சியர் ரத்து செய்து விடுவார்கள்.பணம் மட்டுமே வருவாய்த்துறைக்கு முக்கிய ஆவணம்.
    இப்படிக்கு
    கோவை மாவட்டம் வடக்கு வட்டாட்சியர் மற்றும் கோவை மாவட்டம் வடக்கு கோட்டாட்சியர் இவர்களால் பாதிக்கப்பட்ட ந. அருண்குமார்
    கோவை

  • Disqus ( )