வாழப்பாடி இலக்கியப் பேரவை இளைஞர்கள் நடத்திய சரித்திர நாடகம் அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அருகே நடைபெற்ற பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர நாடகத்தை இனிவரும் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த சரித்திர நாடகதை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கண்டுகளித்தனர் தற்பொழுது உள்ள விஞ்ஞான காலத்தில் சமூக நாடகமும் சமூக வடிவிலான திரைப்படங்களும்,
பொதுமக்களுக்கு கேலிக்கையாக உள்ளது நிலையில் அதையெல்லாம் மீறி தமிழர்களின் சரித்திரத்தில் நடைபெற்ற நம் முன்னோர்களின் பழம்பெருமையை தமிழர்களின் பழம்பெருமையும் இனி வரும் புதிய தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டவும்,
முந்தைய காலத்தில் நடைபெற்ற சரித்திர வரலாறுகளை இனிவரும் தலைமுறையினருக்கு தெளிவாகவும் சுருக்கமாகவும் வடிவமைத்து தெரிவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட நாடகம் இந்த சரித்திர நாடகம் பொன்னியின் செல்வன் இதில் நடித்ததற்கு பெருமை கொள்வதாக தற்போது உள்ள இளைஞர்கள் தெரிவித்தனர்.
வரலாற்று சுவடுகளை தெரிந்து கொள்வதில் நம் தமிழர்களின் பாரம்பரியத்தை அழியாமல் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும் என தெரிவித்தனர்.