விருத்தாச்சலம் டேனிஷ்மிஷின் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பர்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் பிரேம்குமார் முன்னிலையில் வகித்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜான் பிராங்க்ளின் அருள்தாஸ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக இமயம் என்கிற அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முரளி மேலும் இமயம் என்கின்ற அண்ணாமலை மாணவர்களுக்கு கல்வி கற்பதின் முக்கியத்துவத்தையும் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையும் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பிரேம்குமார் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் பெற்றதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர் வனத்துறை அலுவலர் திருமாறன் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு தானியங்கி குடிநீர் இயந்திரம் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் திரளாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் சாலமோன் அனைவருக்கும் நன்றி கூறினார்.