BREAKING NEWS

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சித்ரா(31), கார்த்திக்(35), விஜயராஜா(26), பாண்டி செல்வி(35), சுந்தர்ராஜ்(49) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 2 டூவீலர், ரூ.3 லட்சம் பணம், 5 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

Share this…

CATEGORIES
TAGS