விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து கோயில் அருகே திருமணத்திற்காக பந்தல்கால் நட்டனர். இதையடுத்து கோயிலில் சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வளர்ந்திருக்கும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்துக்கு முகூர்த்த புடவை மற்றும் வேட்டி கட்டி மேளதாளம் முழங்க நம்ம பொதுமக்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி தாம்பலம் மாற்றும் வைபவம் நடந்தது. அதை தொடர்ந்து வேப்ப மரத்திற்கு தாலியை கட்டினர். பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைத்த புனித நீர் இரண்டு மரங்களுக்கும் தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டியும், உலக மக்கள் ‘கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கிடவும், அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்ய நாங்கள் முடிவு வெடுத்தோம். அதன்படி அரச மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்யப்பட்டது.
திருமணத்திற்கு அப்பகுதி மக்கள் மொய்ப்பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். மேலும் திருமணம் முடிந்த பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சூர்யா, எஸ் பி தனிப்படை எஸ்ஐ.காந்தி, கிராம நிர்வாக அலுவலர் தீனா, உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.