BREAKING NEWS

வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.

வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் நகர் முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இருந்த போதிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியிலும் காவலர்கள் நீண்ட நேரம் வெயில் மழை என பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர்.

 

கோடை வெப்பத்தால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள காவலர்களுக்கு இயற்கை பானம் வழங்கப்பட்டது இதனை தஞ்சை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

 

அவர்கள் பணி புரியும் இடத்தில் நேரடியாக சென்று தர்பூசணி சாத்துக்குடி நீர்மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கியதோடு வெயிலில் வரும் முதியவர்களுக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

 

நமக்காக வெயில் என்றும் பாராமல் பணியாற்றும் நம்மை பாதுகாக்கும் காவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS