வேண்டாம் போதை என்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வேண்டாம் போதை உறுதிமொழி ஏற்றனர்

வேண்டாம் போதை இன்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பல்வேறு பிரச்சாரங்கள் தமிழக அரசின் சார்பில்நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக lசமூக நலப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை செல்டர் அறக்கட்டளை மற்றும் பெமா அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், புளியந்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் சுமதி, செல்டர் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் சாலமன்ராஜ் , பெமா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கல்லூரி துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தனர்.

பிரச்சாரத்தின் போது போதை உபயோகப்படுத்தி அகலம் மரணம் அடைந்த போதை பக்கிரிக்கு பாடை கட்டி மாணவர்கள் நடனமாடி தெருவெங்கும் பூக்கள் தூவி ஊர்வலமாக தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். பின்னர் மாணவர்கள் மற்றும் கல்லூரி பிரமுகர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க சார்பில் வைக்கப்பட்டிருந்த பலகையில் போதையில் பயன்படுத்த மாட்டோம் மற்றவர்களையும் பயன்படுத்துவதையும் தடுப்போம் என்ற உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டு சென்றனர்.
மேலும் கல்லூரி முதல்வர் சுமதி கூறுகையில் கல்லூரி வளாகத்திற்குள் ஒருபோதும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை அனுமதிக்க மாட்டோம் ஏற்கனவே மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழக அரசு தொடங்கியுள்ள போதை பொருள் தடுப்பு இயக்கத்தின் மூலம் மேலும் மாணவர்களை விழிப்படைய செய்து போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் முன் உதாரணமாக திகழ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
