வேலன் மருத்துவமனை திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.

திருச்சி மாவட்டம், வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வேலன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அலுவலர் டாக்டர் ஐ. தேம்பாவணி பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
மற்றும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.கே. சௌமியா கலந்து கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை மற்றும் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான விழிப்புணர்வை கலந்தாய்வு நடத்தினார்கள்.
இந்நிகழ்வில்இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமின் சிறப்பம்சமாக வேலன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ராஜவேல் கலந்து கொண்டு இந்த முகாமை துவங்கி வைத்தார்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்களின் ஒருவருக்கு மேல் சிகிச்சையாக மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கான பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டது.