வேலூரில் சமத்துவமாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் இக்பால் தலைமையில் ரம்ஜான் சமத்துவ நோன்பு திறக்கும் விழாவானது நடைபெற்றது.


இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சி.எஸ்,ஐ பேராயர் சர்மா நித்யானந்தம், வள்ளிமலை சுவாமிகள் மற்றும் திரளான இஸ்லாமிய மக்கள் பங்கேற்று சமத்துவமாக அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடுகளை கலைந்து சகோதரதுவத்துடன் வாழவேண்டும் என இறைவனை வேண்டி ரம்ஜான் நோன்பினை கஞ்சி பழங்கள் பிரியாணி ஆகியவைகள் உண்டு நோன்பு திறந்தனர் இதில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
CATEGORIES வேலூர்
TAGS அரசியல்ஆன்மிகம்சமத்துவ ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகம்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்
