BREAKING NEWS

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜா கோட்டை மலையில் காட்டுத்தீ. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது. இதனால் வானை முட்டும் அளவிற்கு புகைமண்டலம் சூழ்ந்தது.

 

 

இதில் புளிய மரம், கொய்யா மரம், வேப்பமரம் மற்றும் ஏராளமான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், மாடுகளும் மலைப் பகுதியில் உள்ளதால், தீயில் அவைகளும் எரிந்து கருகி இருக்கலாம் என கால்நடை உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.

 

வனத்துறை அதிகாரிகள் காடுகளுக்கு தீ வைத்த சமூகவிரோதிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தீ வைக்கும் கும்பலை வனத்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS