வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிட கட்டணம் அதிகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகர திட்டத்தின் நகராட்சி நிர்வாகம். மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் புதிய பேருந்து நிலையம் 53.13 கோடியில் கடந்த 29.6.2022 அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் தவிர வெளிமாநில பேருந்துகள் உட்பட அனைத்து வெகு தூர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிட கூடங்களில்( பாத்ரூம்) கழிப்பிட சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளகட்டணமான ₹,1 வசிலிக்காமல் வலுக்கட்டாய கட்டணமாகமாக ₹, 5 வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டண வசூலில் மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது பயண பொது மக்களிடையே பெரும் குற்றச்சாட்டாக பேசப்படுகிறது.
மாநகராட்சி ஆணையாளர் அசோக் குமார், மேயர் ஆகியோர் இந்த குற்றச்சாட்டின் மீது தனி கவனம் செலுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.