வேலூர் மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மாநகராட்சியில் புகார் மனு அளித்ததன் பேரில் தூர்வாரம் பணி இன்று முதல்நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி மண்டலம்1 வார்டு 11 கழிஞ்சூர் இபி காலனி பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மிகவும்சிரமத்திற்கு உள்ளாகி மாநகராட்சிக்கு புகார் அளித்ததின் பேரில்,

மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ். மற்றும் உதவி ஆணையர் செந்தில்குமார்.
உதவி பொறியாளர் பழனி. சுகாதார அலுவலர் சிவக்குமார். மாமன்ற உறுப்பினர் ரஜினி ஆகியோருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


அப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் உள்ள கால்வாய்களில் மண்தூர் வாரும்படி உத்தரவிட்டார் அதன் பேரில் தூர்வாரம் பணி இன்று முதல்நடைபெறுகிறது.
CATEGORIES வேலூர்
