வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கோரிக்கை மனுக்களை கொடுத்த பொதுமக்களிடம் உறுதிபட தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் 47 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குனர் காஞ்சனா உட்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொதுமக்கள் குறைதீர் கூட்டம்முக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வேலூர் மாவட்டம்
