வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

க்ஷவேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் திமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சரும், திமுக மாநில அமைப்பு செயலாளருமான மருத்துவர் வி. எஸ். விஜய், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன், மாநகராட்சி மேயர் சுஜாதா, செயற்குழு உறுப்பினர் ஆர். பி.ஏழுமலை, சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் நூருல்லா மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.